சுகன்யா சம்ரிதி யோஜனா ( SSY ) என்பது ' பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ ' இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கான ஒரு சிறிய வைப்புத் திட்டமாகும். இது தற்போது 8.1 சதவீதமாக உள்ளது மற்றும் வருமான வரிச் சட்டம் , 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரி சலுகையை வழங்குகிறது. இத் திட்டத்தில் வருமானம் கூட வரி விலக்கு பெறுகிறது . ஒரு பெண் பிறந்து 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் ஒரு சுகன்யா சம்ரிதி கணக்கு திறக்கப்படலாம் , குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ . 250 ( முன்பு அது ரூ. 1,000). அடுத்தடுத்த ஆண்டுகளில் , நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ . 250 மற்றும் அதிகபட்சமாக ரூ . 1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம் . எந்தவொரு தபால் நிலையத்திலும் அல்லது வணிக வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளிலும் கணக்கைத் துவங்க முடியும். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது 18 வயதை எட்டியபின் திருமணமான வரை இந்த சேமிப்பு கணக்கு செயல்படும். திட்டம் துவங்கப்பட்ட ஒரு ஆண்டுகளில் தபால் நிலையங்களின் மூலம் 8 லட்சம் சேமிப்பு...
PENCIL – குழந்தை தொழிலாளர் பற்றி புகார்கள் தெரிவிக்க உறுவாக்கப்பட்ட இணைய வாயில் (Web Portal) https://pencil.gov.in/ 2. SHE Box – பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் (Sexual Harassment at Workplace) தொடர்பான புகார்களை பதிவிட உறுவாக்கப்பட்ட இணைய வாயில். http://shebox.nic.in/ 3. Sakhi – OSC – இந்தியளவிலான ஒருங்கிணைந்த பெண்கள் உதவி மையம் வாயிலாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேர உடனடி மற்றும் அவசரகால சேவை வழங்கும் நோக்கம் கொண்டது . https://wcd.nic.in/sites/default/files/WHL_G.pdf 4. Mahila-E-Haat - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதிலுமிருந்து வரும் பெண் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் தனித்துவமான பொருட்களுக்கான இணைய வழி சந்தையாக இந்த வாயில் உறுவாக்கப்பட்டது . http://www.nari.nic.in/schemes/online-market-platform-mahila-e-haat