இந்தியாவில் அமைப்புசாரா துறையை குறைந்துவருவது வளர்ச்சியின் ஒரு
"நேர்மறையான" குறியீடு என்றும் இப்பொது உள்ள
அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் தகுந்த தரவுகளை
தயாரிக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார்
மாநிலங்களவையில் கடந்த வருடம் (ஜூலை, 2019) தெரிவித்தார்.
ஆம், அமைப்புசாரா துறைகளின் இயக்கம் சரியாக கணக்கிடப்படுவதில்லை,
இதனால் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி புலப்படவில்லை மற்றொருபுறம், பேரியல் பொருளாதாரத்தின்
இயக்கு கருவிகலான நிதி கொள்கையும், பணக் கொள்கையும் செயலற்ற நிலையில் இருக்கிறது. அமைப்புசாரா
துறைகள், மக்களுக்கு தன்னாட்சி நிலையை கொடுத்தாலும், அது அவர்களுக்கு தக்க சமூகப்பாதுகாப்பை
அளிப்பதில்லை என்பது இந்த கொரானா (COVID-19) நெருக்கடியில் நன்கு தெரிந்தது.
பிரதான் மந்திரி
வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் (PMRPY) முயற்சியின் கீழ், பயனாளிகளைப் பதிவு செய்வதில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, கடந்த மூன்று ஆண்டுகளில்
1.2 கோடி ஊழியர்கள் பயனாளிகளாக பதிவு செய்துள்ளனர். பாரளுமன்றத்தில் நிலுவையிலுள்ள
அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு சட்டம்
தொழிலாளர்களுக்கு பொருத்தமான நலத்திட்டங்களை வகுக்கும்.
விவரம்: https://pmrpy.gov.in/
உடல்நலம் மற்றும் மகப்பேறு நலன்கள்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படும். அண்மையில் மத்திய
அரசு அறிவித்ததாவது, 60 வயதை எட்டிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு
மாதந்தோறும் ரூ .3,000 ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் பிரதம
மந்திரி தொழிலாளர் யோகி மந்தனை அறிமுகப்படுத்தியது.
தொழிலளர்கள் நலன் பாதுகாக்க, தற்ப்போது உள்ள திட்டங்கள்:
PM-SYM (PM -
SHRAM YOGI MAANDHAN YOJNA) பிப்ரவரி 15, 2019
அமைப்பு
சாராத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதன் மூலம் முதுமைக் கால துகாப்பை உறுதிப்படுத்துதல்.
18-40 இடையிலான வயதுடைய அமைப்பு சாராத்துறை தொழிலாளர்கள் மாதாந்திர வருமானம் ரூ.15,000
வரையுள்ளவர்கள் தகுதியானவர்கள். குறிப்பு: EPF / NPS / ESIC யனாளர்கள் மற்றும்வருமான
வரி செலுத்துவோருக்கு இந்தச் சலுகை கிடையாது
விவரம்: https://maandhan.in/shramyogi
DDU – SJK
(Deendayal Upadhyay Shramev Jayate Karyakram) அக்டோபர், 2014
தொழிற்துறை மற்றும் வணிக
வளர்ச்சிக்குஉகந்ததாக சூழலை உருவாக்கி, பல தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி
“இந்தியாவில் தயாரிப்போம்” பிரசாரத்திற்கு ஆதரவு திரட்டல்.
விவரம்: https://shramsuvidha.gov.in/dglw அல்லது
https://labour.gov.in/
பிரதம மந்திரி ஏழைகள்
நலத் திட்டம் நிதி தொகுப்பு: மே 13, 2020 ( PMGKY: Pradhan Mandhri Garib Kalyan Yojana Package)
கொரோனா (COVID-19) வைரஸுக்கு எதிரான இந்த போரட்டத்தில் ஏழை மக்களுக்கு உதவிட இத்திட்டத்தின் கீழ் 1.70 லட்சம் கோடி நிவாரண நிதி
தொகுப்பு உறுவாக்கப்படுகிறது.
·
சுகாதார
ஊழியருக்களுக்கு தலா ரூ .50 லட்சம் காப்பீடு
·
அடுத்த மூன்று
மாதத்திற்கு 80 கோடி ஏழை மக்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படுகிறது.
·
அடுத்த மூன்று
மாத த்திற்கு மாதம்தோரும் ஒரு வீடிற்கு ஒரு கிலோ பருப்பு வகைகள் வழங்கப்படும்.
·
20 கோடி பெண்கள் ஜன தன் கணக்கு
வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு ரூ .500 என்ற வீதம் அடுத்த
3 மாதங்களுக்கு வழங்கப்படும்.
·
அடுத்த 3 மாதத்திற்கு 8 கோடி
ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
·
ஊரக வேலைத்திட்ட த்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ஒரு நாள்
கூலி ரூ.182 யில் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும், இதனால் 13.62
கோடி குடும்பங்கள் பயனடைவர்.
·
தற்போதுள்ள PM-KISAN திட்டத்தின் கீழ் 8.7 கோடி விவசாயிகளுக்கு முன் ஏற்றப்பாடாக அறிவிக்கப்பட்ட ரூ
.2,000 வழங்கப்படும்.
·
கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதியம் தொழிலாளர்களுக்கு
நிவாரணம் வழங்க உறுவாக்கப்படுகிறது.
·
100 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நிருவனங்களின் மாதங்கள் ரூ .15,000 க்கும் குறைவான ஊதியம்
பெறுபவர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (Provident Fund) மாதாந்திர ஊதியத்தில் 24% என்ற
அடிப்படையில் அடுத்த மூன்று மாத த்திற்கு வரவு வைக்கப்படும்.
·
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)
கீழ் பதிவு செய்யப்பட்ட ஐந்து கோடி தொழிலாளர்களுக்கு தொகுப்பின் 75% தொகை அல்லது மூன்று மாத ஊதியம், இவற்றில் குறைந்த தொகையை முன்கூட்டியே பெற ஏற்ப்பாடு செய்யப்படுகிறது.
·
கடன் வழங்குவதற்கான வரம்பு ரூ .10 முதல் ரூ .20 ஆக உயர்த்தப்பட வேண்டும்
·
6.85 கோடி குடும்பங்களை ஆதரிக்கும் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு பினையில்லா கடன் வழங்கும்
வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பிரதம மந்திரி ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் (Garib Kalyan Rojgar
Abhiyaan)
அதிகபட்சமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை
திரும்பப் பெற்ற பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம்,
ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய ஆறு
மாநிலங்களின் 116 மாவட்டங்களில் 125 நாட்களில்
'ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்' ஒரு முன்னோட்டமாக/
சோதனை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
கொரோனா நெருக்கடியினால் தொழில்கள் முடங்கியதில் வேலையிழந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
உதவிடும் வகையில் ரூ .50,000 கோடி நிதியுடன்
இந்த வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தப்போது பாரத் பிரதமர் மோடி கூறியதாவது, ”நாடு தழுவிய இந்த முடக்கதினால்
(Lockdown), நகரங்களில் இருந்து திறமைகள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளது, இது
இப்போது கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகின்றேன்”
என்றார்.
இந்த திட்டம் பொது உள்கட்டமைப்பு பணிகள்
மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த உதவும்.
இதில் 25 பணிகள் அடங்கும், குறிப்பாக
ஏழைகளுக்கான கிராமப்புற வீட்டுவசதி, தோட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் வழங்குதல், பஞ்சாயத்து
பவன்கள், சமூக கழிப்பறைகள், கிராமப்புற
மண்டிகள், கிராமப்புற சாலைகள், கால்நடை
கொட்டகைகள் மற்றும் அங்கன்வாடி பவன்களை நிர்மாணித்தல் தொடர்பானவை என்று ஊரக
அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து
ராஜ், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம்
மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி, எல்லை சாலைகள், தொலைத்தொடர்பு,
மற்றும் விவசாயம், என்று 12 ற்கும் மேற்பட்ட அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு
இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
உத்திர பிரதேசத்தில் உள்ள உன்னாவோ என்ற இடத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கொரான நெருக்கடியின் போது அங்கு தங்கியிருந்த
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவினர், அந்த பள்ளியை பழுதுபார்த்து வண்ணம் தீட்டியுள்ளனர், இந்த
திட்டத்திற்கான யோசனை இவர்களிடமிருந்தே கிடைத்தது என்று பிரதமர் கூறியிருந்தார்.
விவரம்: http://gkra.nic.in/
புலம்பெயர் தொழிலாளர் நலன் குறித்த நடவடிக்கைகளுக்கு மத்திய
அரசு சில பரிந்துறைகளையும் வழங்கியுள்ளது, இதனை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க
வேண்டும்.
1.
அனைவருக்குமான சமூக பாதுகாப்பு வழங்கிட வேண்டும். இதனை பாரளுமன்றத்தில் நிலுவையுள்ள “சமூக பாதுகாப்பிற்கான
வரைவு விதி 2018” வலியுறுத்துகிறது.
2.
சமூக பாதுகாப்பு உரிமையின் பெயர்வுத்திறன் (Portability of Social
Security Entitlement). எ.கா: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்
3.
தொழிலாளர் சந்தையில் உள்ள முரண்களை, ஏற்றத்தாழ்வுகளை குறைக்க
வேண்டும். நிலையான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில்
கவனம் செலுத்துவதன் மூலம் அதிக உற்பத்தித்திறனுக்கு
வழிவகுக்கும்.
4.
தொழிலாளர்களுக்கான நாடுதழுவிய ஒரே மாதிரியான பதிவு முறை. இதன்
சோதனையோட்டமாக அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கான UWSSA
வலைதளம் உறுவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மொபையில் செயலியும் இயக்கப்பட்டு
வருகிறது.
5.
தொழிலாளர்களுக்கான பொது சுகாதார சலுகைகள் குறிப்பாக ESIC,
PMSBY, பணியிட பாதுகாப்பு போன்றவை வலுவான கட்டமைக்களுடன் இருத்தல் அவசியம்.
பாரளுமன்றத்தில் நிலுவையுள்ள தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலையத்திற்கான வரைவு விதி (OSH Code 2018) இதனை
உள்ளடக்கியதாக உறுவாக வேண்டும்.
6.
புலம்பெயர் தொழிலாளர்களின் குழுந்தைகள் மற்றும் பெண்பிள்ளைகளை
கவனத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பெண்கள், அரசு நலத்திட்டங்களிலிருந்து
விடுபடாமல் இருக்க கூடுதல் கவனம் தேவை.
எ.கா: பெரும்பாளும் புலம்பெயர்
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
மும்மொழி கொள்கையின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
பின் தொடர்க: https://www.narendramodi.in/news
Comments
Post a Comment