தேசிய (NSSO) கணக்கெடுப்பின்படி (2013), சுமார் 5.77 கோடி சிறிய(Micro) தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன, இதில் சுமார் 12 கோடி மக்கள் ஈடுபடுகின்றனர், இவை பெரும்பாலும் தனிநபர்கள் உரிமையாளர் / சொந்த கணக்கு நிறுவனங்கள்.
இந்தியாவில் 60% க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியல் சாதி,
பட்டியல் பழங்குடி அல்லது பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சொந்தமானவை. இந்த அலகுகளில் பெரும்பாலானவை முறையான வங்கி அமைப்புகளுக்கு
வெளியே உள்ளன, எனவே அமைப்பு சாரா ஆதாரங்களிலிருந்தே கடன் பெற்வோ அல்லது தன் சொந்தமான நிதி வரம்பைப்
பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த இடைவெளியைக் குறைக்க முத்ரா (MUDRA) கடன் திட்டம்
முன்மொழியப்படிருந்தது.
நோக்கம்:
முத்ரா கடன் திட்டம் ஆர்வமுள்ளவர்களின்
நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது, முதல் தலைமுறை தொழில்முனைவோராக இளைஞர்களை மாற்ற, சிறு வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த பெரிதும் உதவுகிறது.
முத்ரா கடன்கள் முத்ரா லிமிடெட் அறிவித்த முகமைகளான வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) நுண் கடன் நிதி நிறுவனங்கள் (MFI) மற்றும் பிற தகுதியான நிதி மூலம் நீட்டிக்கப்படுகின்றன. பிரதான் மந்திரி முத்ரா திட்டம் (PMMY) மாண்புமிகு பாரத பிரதமரால் 8
ஏப்ரல் 2015 அன்று அறிவிக்கப்பட்டது, வருமானம்
ஈட்டுவதற்கு உற்பத்தி, வர்த்தகம்
மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறு-குறு நிறுவனங்களுக்கு 10 லட்சம் வரை முத்ரா கடனை வழங்க திட்டமிட்டிருந்தது.
ஜன் தான் திட்டத்தின் (PMJDY) கீழ் அனுமதிக்கப்பட்ட 5000 ரூபாய் கடன்
(Overdraft) தொகையும் இத்திட்டத்தின் கீழ் முத்ரா கடன்கள் என
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முத்ரா கடன்கள் பின்வரும் மூன்று பிரிவுகளின் கீழ்
நீட்டிக்கப்படுகின்றன:
ரூ. 50,000 / - (ஷிஷு) வரை கடன்கள்
ரூ. 50,001 முதல் ரூ. 5 லட்சம்
(கிஷோர்) வரை கடன்கள்
ரூ. 5,00,001 / - முதல் ரூ. 10 லட்சம் (தருண்) வரை
கடன்கள்
இதில் ஷிஷுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
பயனாளிகள்:
தனி நபர், தனியார் நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம், பொது நிறுவனம்,
மற்ற சட்டப்பூர்வ அமைப்புகள் இந்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
விண்ணப்பதாரர் எந்தவொரு வங்கி
அல்லது நிதி நிறுவனத்திற்கும் கடனாளியாக இருக்கக்கூடாது, மற்றும் திருப்திகரமான கடன் தட பதிவு (Credit Track Record) வைத்திருக்க வேண்டும். தனிப்பட்ட கடன்
வாங்கியவர்கள் முன்மொழியப்பட்ட செயல்பாட்டை மேற்கொள்வதற்கு தேவையான
திறன்கள் / அனுபவம் / அறிவை பெற்றிருக்க வேண்டும்.
மூலதன வரம்பைச் செயல்படுத்தும்
நோக்கத்திற்காக, "முத்ரா கார்டு" அறிமுகப்படுத்த பட்டிருந்தது,
இது ரூபே (RuPay) இயங்குதளத்தில் வழங்கப்பட்ட
டெபிட் கார்டு, மற்றும் இது எளிய வகையில்
கடன் பெற உதவுகிறது.
தமிழகத்தில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை
7440662 நபர்கள் என்று மொத்த
கடன் மதிப்பு ரூ. 33807.87 கோடி ஆகும்.
இந்தியளவில் அதிகம் கடன் பெற்று பயனடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம். இரண்டாவது
இடத்தில் கர்னாடக (மொத்த கடன் மதிப்பு (ரூ.
29345.44), மூன்று நான்கு இடங்களில்
மேற்கு வங்காளம் (மொத்த கடன் மதிப்பு ரூ. 25892.29) மற்றும் மஷாரஸ்ட்ர (மொத்த கடன் மதிப்பு
ரூ. 25741.99) உள்ளது.
புள்ளிவிவரம்: https://www.mudra.org.in/Default/DownloadFile/StateWise_Performance_2018-19_1.pdf
பயன் பேற்றவர்கள்:
https://www.mudra.org.in/Default/DownloadFile/Profile_of_MUDRA_Udyamis.pdf
Web Portal: https://www.mudra.org.in/
Other Links:
https://sbi.co.in/web/business/sme/sme-loans/pm-mudra-yojana
Refer:
https://www.mudra.org.in/Default/DownloadFile/MudraLoan-SalientFeatures-English.pdf
https://www.mudra.org.in/Default/DownloadFile/Coffee_Table_Book_MUDRA.pdf
Comments
Post a Comment