Svamitva (Ownership) - geospatial database of all rural properties
ஸ்வாமித்வா திட்டம் (SVAMITVA Scheme) தொடர்பாக மத்திய ஊரக
வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இந்த திட்டம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் (ஏப்ரல் 24) தொடங்கப்பட்டது.
நோக்கம்:
கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த சொத்து
சரிபார்ப்பு தீர்வை வழங்குதல்.
ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் தொடர் நிலையில் இயங்கும் குறிப்பு
நிலையம் (CORS) ஆகியவற்றைப் பயன்படுத்தி கிராமப்புற மக்கள் வசிக்கும்
பகுதிகளில் நிலப் பகுதிகளை வரைபடமாக்கும் திட்டம் இது.
2020 முதல் 2024 வரை நான்கு ஆண்டுகளில் கட்டம் கட்டமாக நாடு
முழுவதும் செய்யப்படும்.
நன்மைகள்:
கிராமப்புறங்களில் திட்டமிடல் மற்றும் வருவாய்
வசூலை நெறிப்படுத்துவதற்கும் சொத்துரிமை குறித்த தெளிவை உறுதி செய்வதற்கும் இந்த
திட்டம் உதவும்.
இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட
வரைபடங்களைப் பயன்படுத்தி சிறந்த தரமான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை
(GPDPs) உருவாக்க இந்த திட்டம்
உதவும்.
பொருளாதார வளர்ச்சி மற்றும்
சமூக நீதிக்காக கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை (GPDPs) தயாரிக்க கிராம பஞ்சாயத்துகள் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின்
பதினொன்றாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து 29 பணிகள் தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள் / இயக்கத் துறைகளின்
திட்டங்களுடன் ஒன்றிணைந்து பங்கேற்பு செயல்முறையை கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத்
திட்டங்களை (GPDPs) அடிப்படையாகக்
கொண்டது.
தற்போது பயனடையும் பகுதிகள்: இந்த திட்டம் தற்போது ஹரியானா, கர்நாடகா, மத்தியப்
பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஆறு
மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
2018 பொருளாதார கணக்கெடுப்பு குறிப்பிடுவதாவது, மதிப்பிடப்பட்ட சொத்து வரியின் 19% மட்டுமே கிராம பஞ்சாயத்துகளால் வசூலிக்கப்படுகிறது.
குறைந்த வசூல் செய்வதற்கான ஒரு காரணம், சொத்துக்கள் பற்றிய தரவு இல்லாதது – அதாவது அவை எங்கு
அமைந்துள்ளன, அவை குடியிருப்பு அல்லது
வணிக ரீதியானவையா, பொருத்தமான வரி
மதிப்பு என்னவாக இருக்க வேண்டும், யாருக்கு வரி
விதிக்கப்பட வேண்டும் பொன்ற பல தகவல்கள்
இதில் அடங்கும்.
சிறந்த முடிவுகளுக்கு தேவையான நான்கு தூண்கள்:
- தொடக்கத்திலிருந்தே மக்கள் பங்களிப்பை அதிகரித்தல்.
- மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும்.
- குறை தீர்க்கும் முறையை நிறுவுதல்.
- சந்தைகளை சரியான முறையில் இயங்க செய்தல்.
Web Portal:
Comments
Post a Comment