இந்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள். (Schemes & Policies of Government of India)
இந்த நிகழ்ச்சி தொகுப்பின் வாயிலாக உங்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான
திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றியும், எதிர்கால இலட்சிய இலக்குகளை பற்றியும்
விரிவாக கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த கட்டுரையில் அதற்கு தொடர்புடைய இணைய சேவை இனைப்புகளையும், மக்கள் பங்களிப்பின் முக்கிய துவத்தையும், பயன் தரக்கூடிய இன்ன பிற ஆலோசனைகளும், பரிந்துரைகளும் உள்ளது.
வளமான பாரதத்தை உறுவாக்கிட பங்களிப்போம்.
சுய முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம். நன்றி!!
வாழிய செந்தமிழ்! வாழிய பாரதம்!! வாழிய பாரத மணித் திரு நாடு!!!
தன் நிறைவான பாரதத்தை உருவாக்கிடுவோம்!!
இந்தியா COVID-19 சூழ்நிலையை துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டவந்தது, இது 2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்தியாவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளின் (PPE) பூஜ்ஜிய உற்பத்தியில் இருந்து, இன்று 2 லட்சம் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது என்பதிலேயே தெளிவாகிறது, இந்த உற்பத்தி சீராக வளர்ந்தும் வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியா எவ்வாறு சவால்களை எதிர்கொள்கிறது மற்றும் அதில் உள்ள வாய்ப்புகளை வெளிக்கொணர்வதை நிரூபித்துள்ளது, இது பல்வேறு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை சீரமைத்து உயிகாக்கும் சுவாச கருவிகளை (Ventilators) செய்வதில் வெளிப்படுகிறது.
பொருளாதார மீட்சிக்கான இந்த தருனத்தில் இந்தியாவை தற்சார்பாக (Athmanirbhar) மாற்றும் முயற்சிக்கு மாண்புமிகு பிரதமர் அழைப்பு விடுத்தது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்சார்பு பாரதத்தின் ஐந்து தூண்கள் இதில் கவனம் செலுத்துகின்றன:
1. பொருளாதாரம் (Economy)
2. உள்கட்டமைப்பு (Infrastructure)
3. அமைப்பு (System)
4. துடிப்பான மக்கள்தொகை (Vibrant Demography)
5. தேவை (Demand)
சுய சார்பு இந்தியா இயக்கம் (Atma Nirbhar Bharat ANB Mission)
சிறப்பு பொருளாதார மற்றும் விரிவாக்க நிதி தொகுப்பு ரூ .20 லட்சம் கோடி – இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% க்கு சமம்
குடிசைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதி தொகுப்பு உறுவாக்கப்பட்டுள்ளது,
சிறு-குறு (MSME) தொழில்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், பிற தொழில்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
அனைத்து துறைகளிலும் இத்தகு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்கள் நம் நாட்டை தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி முன் நகர்த்தும்.
பாரத பிரதமரின் “Vocal for Local” என்ற அழைப்பு உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்பதற்கும் அவற்றை உருவாக்குவதற்கும் இது நேரம் என்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இது உலகளாவிய தேவையும் கூட.
ரூ.3 கோடி பினையில்லா கடன் வசதி: (Automatic Collateral-Free Loan Facility)
கொரனா பாதிப்பின் (COVID19) காரணங்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள
வணிகங்கள் / MSME கள் கட்டமைக்கப்பட்ட செயல்பாட்டு பொறுப்புகளை பூர்த்தி செய்ய, மூலப்பொருளை வாங்க மற்றும் மறுதொடக்கம் செய்ய கூடுதல் நிதி தேவைகளை பெற்றுத்தரஇது உதவும்.
முக்கிய முடிவுகள்: வங்கிகளிடமிருந்து அல்லது NBFC நிறுவனங்களிடமிருந்து வணிகங்கள் / MSME தொழில்களுக்கு, 29.2.2020 நிலவரப்படி நிலுவையில் உள்ள மொத்த கடனில் 20%வரை அவசர கடன் வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது.
1. ரூ. 25 கோடி நிலுவை (Outstanding)மற்றும் ரூ. 100 கோடி வருவாய் தகுதி (Turnover)
உள்ள கடனாளிக்கு இது பொருந்தும்.
2. இந்த கடன்கள் 4 ஆண்டு காலவரையறை (Maturity) கொண்டவை, முதலை திப்பிச் செலுத்த கூடுதலாக 12 மாத கால அவகாசம் (Moratorium) வழங்கப்படும்.
3. வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத பாதுகாப்பு (Credit Guarantee Cover)
4. இத்திட்டத்தின் கீழ் அக்டோபர் 31, 2020 வரை பயன் பெறலாம்.
5. உத்தரவாத கட்டணமோ, புதிய பினையோ தேவையில்லை.
இந்த வசதி சுமார் 45 இலட்ச சிறு-குறு தொழில் நிறுவனங்களை தங்கள் வனிகத்தை மறு தொடக்கம் செய்ய உதவும்.
பாதிக்கப்பட்ட MSME தொழில் நிறுவனங்களுக்கு ரூ .20,000 கோடி துணை கடன் (Subordinate Debt)
1. பாதிக்கப்பட்ட MSME களுக்கு பங்கு ஆதரவு தேவை என்பதால் இரண்டு லட்சம் MSME நிறுவனங்கள் பயனடைய வகையில் மத்திய அரசு துணைக் கடனாக 20,000 கோடி ஏற்பாடு செய்கிறது.
2. தற்போது இயங்கிவரும் MSME கள் அதிக கடன் நிலுவையுடனோ அல்லது பாதிக்கப்பட்ட நிலையிலோ இருப்பின் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். இதற்காக (சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத நிதி முகமை) CGTMSE க்கு மத்திய அரசு ரூ. 4,000 கோடியை ஒதுக்கீடு செய்கிறது.
3. சிறு-குறு (MSME) நிறுவனங்களின் ஆதரவாளர்களுக்கும், இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய வங்கி கடன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
ரூ .50,000 கோடி அளவில் MSME தொழில் நிறுவனங்களுக்கான பங்கு முதலீட்டுக்காகநிதிகளின் நிதியம் உறுவாக்கப்படுகிறது
சிறு- குறு (MSME) தொழில் நிறுவனங்கள் கடுமையான நிதி பற்றாக்குறையை எதிர்க்கொள்கின்றன. இதற்காக நிதிகளின் நிதியம்ரூ.10,000 கோடியில் உறுவாக்கப்படுகிறது. இது ரூ.50,000 வரை கூடுதல் கடன் நீடிப்பு வசதியுடன் இயக்கப்படும். இதனால் நம்பகதன்மைவாய்ந்த, வளர்ச்சி ஆற்றல் கொண்ட, MSME நிறுவனங்கள் தன் அளவையும், திறனையும் பெருக்கிக்கொள்ள முடியும்.
To be Continue.....
Comments
Post a Comment